Saturday, May 23, 2009
கருணை செய்வாய் கஜவதனா!
கருணை செய்வாய் கஜவதனா
கானரசம் பொங்கும் ஞான வரம் தந்தே
(கருணை செய்வாய்)
அருள் ஓங்கும் சுத்த சக்தி சிவகாமி
அம்பிகை சுதனே நம்பினேன் உனையே
(கருணை செய்வாய்)
தீங்கனி பாகு தேன் சேர் அமுதம்
திருமுன் படைத்து சரணம் புகுந்தேன்
ஓங்கார விநாயக விக்ன ராஜா
உயர்வான வெற்றி அருளும் கணேசா!
(கருணை செய்வாய்)
இயற்றியவர்: கவியோகி. திரு. சுத்தானந்த பாரதியார்
மின் தமிழ் குழுமத்தில் இட்டவர்: திரு. தமிழ்த்தேனீ
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நர்த்தன விநாயாகரும், பாடலும் அருமை.
எல்லாருக்கும் கருணை செய்வாய் கஜவதனா
Post a Comment