வினாயகனே! வினை தீர்ப்பவனே! இதான் முதல்வன் வலைப்பூவில் முதல் பாடல்! சீர்காழியாரின் கன கம்பீர வெங்கலக் குரலில், பாடலை இங்கு கேட்கலாம்!
வினாயகனே!வினை தீர்ப்பவனே!
வேழ முகத்தோனே! ஞால முதல்வனே!
(வினாயகனே)
குணா நிதியே! குருவே சரணம்!
குறைகள் களைய, இதுவே தருணம்!
(வினாயகனே)
உமா பதியே உலகம் என்றாய்!
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்!
கண நாதனே மாங்கனியை உண்டாய்!
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்!
(வினாயகனே)
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரி:
இசை:
ராகம்: கீரவாணி
தாளம்:
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அண்ணன் தம்பி போட்டியைப் பத்தி சொல்ற பாட்டு தானே? அது தான் முதல் பாட்டா? சரி தான். :-)
மதுரையில் மீனாட்சி தியேட்டர் என்று ஒரு திரையரங்கு இருக்கிறது (இருந்தது?). அங்கே படம் போடுவதற்கு முன்னர் இந்தப் பாடலை முழுவதுமாகவோ முதல் சில வரிகளோ இடுவார்கள். அப்படித் தான் எனக்கு இந்தப் பாடல் அறிமுகமானது. நான் பிறப்பதற்கு முன்னர் படம் முடிந்த பின் நாட்டுப்பண்ணையும் போட்டுக் கொண்டிருந்தார்களாம். பின்னர் நிறுத்திவிட்டார்களாம்.
முதல் முதலாக திருக்கயிலை நாதரை சுற்றும் கிரிவல நாயகரின் பாடலுடன் பிள்ளையார் பாடல் அற்புத ஆரம்பம்.
நன்றி KRS ஐயா.
Post a Comment