Thursday, September 18, 2008

முதல்வனுக்கு முதல் வணக்கம்!

ஒவ்வொரு குழு வலைப்பூ துவங்கும் போதும் கணபதியானை முன்னிட்டு, முதல் வணக்கம் இட்டுத் தான் துவங்குவோம்! ஆனால் அவனுக்கு என்று தனியான ஒரு வலைப்பூ இது வரை தோன்றவில்லை! பிள்ளையார் சதுர்த்தி அன்று கைலாஷி ஐயா, தமது வலைச்சரப் பதிவில் இதைச் சற்று ஏக்கத்துடன் குறிப்பிட்டு இருந்தார்!

அவர் ஏக்கத்தைப் புரட்டாசியில் புரட்டிப் போட வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் போலும்! இதோ விநாயகப் பெருமானுக்கு என்று தனியானதொரு பாடல் வலைப்பூ! - பிள்ளையார் பாட்டு!

இன்று மகா சங்கட ஹர சதுர்த்தி!
இன்றே செய்வோம்! நன்றே செய்வோம்! யானைக் கன்றே செய்வோம்!

முதல்வனுக்கு முதல் வணக்கம்!

2 comments:

குமரன் (Kumaran) said...

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை வணங்கிக் கொள்கிறேன் அடியேனும்.

S.Muruganandam said...

தன் விருப்பத்தை கந்தனுக்கு மூத்தவர் அடியேன் மூலமாக தீர்த்துக்கொண்டார் போலும். அனைத்துக்கும் அவரே ஆதாரம்.

அழகிய கணபதியே போற்றி