Wednesday, May 19, 2010

விநாயகர் நான்மணி மாலை


விநாயகர் நான்மணி மாலை என்ற தலைப்பில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் புதுவை மணக்குள விநாயகப் பெருமான் மேல் ஒரு நூலை இயற்றியுள்ளார். வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்ற நான்கு வித பா வகைகளில் பாடல்கள் புனைந்திருக்கிறார். மொத்தம் நாற்பது பாடல்கள் இந்த நூலில் இருக்கின்றன. மிக அருமையான கருத்துகள் பல இந்தப் பாடல்களில் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சக்தி பெறும் பாவாணர் சாற்று பொருள் யாதெனினும்
சித்தி பெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தானே!
நின் தனக்குக் காப்புரைப்பார் நின் மீது செய்யும் நூல்
இன்றிதற்கும் காப்பு நீயே.


சக்தியின் அருள் பெறும் பாக்கள் இயற்றுவதில் வல்லவர்கள் எந்தப் பொருளைப் பற்றி நூற்களை எழுதினாலும் அது நன்கு அமையும் படி வாக்கு வன்மை பெற தலைவனே உனக்கு காப்புச் செய்யுள் உரைப்பார்கள். உன் மீது இயற்றப்படும் இந்த நூலுக்கும் நீயே காப்பு.

Sunday, August 23, 2009

பள்ளியிற் பிள்ளையார் சிந்தனை




எள்ளு பொரித்த பொரியும் இடித்தவல் தன்னிற்கலந்து
வள்ளிக்கிழங்கை திருத்தி வாழைப்பழத்தை யுரித்து
உள்ளியபாகு திரட்டி உண்ணும்படியே தருவோம்
கள்ளத்திருமால் மருகா கணபதி சப்பாணி கொட்டாயே

ஆறு தேங்கா யவல்தூணி அதற்கு தகுந்த எள்ளுருண்டை
நூறுகுடலை மாம்பழம் நொடிக்குமளவி லமுது செய்வல்ல பிள்ளாய்
ஆடல் பாடல் சங்கீதம்அடியேன் காண
நின்றாடாயே சண்டுபெருச்சாளி மீதேறிச்சடுகுடு என்ன உலாவி
இண்டை இளம்பிறை சாயஇணங்கிய கொம்பேரிண்டூத அண்டத்தமரர் துதிக்கஅடைக்கலங்காத்த பிரானாரே
குண்டைக்கணபதி நம்பிகுதங்கையாற் சப்பாணி கொட்டாயே

பொழுது விடிந்துபொழுதுபோய்திருமலை மேலேற வேண்டும்
ஏறிமலர்ந்துபூ கொய்ய வேண்டும்கொய்து திருமுடி சாத்தவேண்டும் சாத்தியே கைகட்டி நிற்க வேண்டும்நின்று திருவிளக்கேற்ற வேண்டும் ஏற்றி அரகரா என்ன வேண்டும்
ஐயா கணபதி நம்பி ஆயிரநாமமுடையாய்பொய்யில்லாத மெய்யுரைப்பாய் போனதெள்ளாம் தருவாய்வெள்ளித்தாம்பூலம் பூசி வைத்து வேண்டும்படியே யிட்டுண்டுபல்ளிற்கேற்ப நதவாய் பாக்கியம் செய்த பிள்ளாய்பிள்ளாய் பிள்ளாய் பேருடையீர் பிரமனெனும் பேருடையீர்பிள்ளைகள் தங்கள் பிரானாரே இருந்தீரே பிரானேரே
எங்கள் மனது கலங்காதோ பள்ளித்தடுக்கும் கையேடும்படிக்கும் சுவடியும் பரித்தெடுத்து துள்ளித்திரியும் கால்தன்னைசுகமே நிறுத்தும் பிரானாரே ஒடாதே ஒளியாதேஇட்டதே சோறும் பெற்றாதே கறியும் உண்டு
தூங்கி பூசை முடித்துவெள்ளிமுளைக்கப் பள்ளிக்கு வாரும்.

Saturday, May 23, 2009

கருணை செய்வாய் கஜவதனா!


கருணை செய்வாய் கஜவதனா
கானரசம் பொங்கும் ஞான வரம் தந்தே
(கருணை செய்வாய்)

அருள் ஓங்கும் சுத்த சக்தி சிவகாமி
அம்பிகை சுதனே நம்பினேன் உனையே
(கருணை செய்வாய்)

தீங்கனி பாகு தேன் சேர் அமுதம்
திருமுன் படைத்து சரணம் புகுந்தேன்
ஓங்கார விநாயக விக்ன ராஜா
உயர்வான வெற்றி அருளும் கணேசா!
(கருணை செய்வாய்)

இயற்றியவர்: கவியோகி. திரு. சுத்தானந்த பாரதியார்
மின் தமிழ் குழுமத்தில் இட்டவர்: திரு. தமிழ்த்தேனீ

Saturday, October 11, 2008

பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர்







இந்த பாடல் கவியரசர் கண்ணதாசன் இயற்றியது, கண்ணதாசன் செட்டிநாட்டுக்காரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பிள்ளையார் சுயம்புவாய் ஒரு குகையில் எழுந்தருளியுள்ள பிள்ளையார்பட்டியும் செட்டிநாட்டிலே உள்ளது ஆகவே தனது அனுபவத்தை கண்ணதாசன் இப்பாட்டில் கூறுகின்றார்.



அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத்
திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து
பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை.

பிள்ளையார் பட்டி என்னும்
பேரருள் சுரங்கத்தின் கண்
உள்ளவன் மலையில் பூத்த
உருவத்தின் இயற்கைத் தோன்றல்
தெள்ளிய மனத்தர்க்கு எல்லாம்
திருவருள் வழங்கும் தெய்வம்
கள்ளமில் பக்தர் தந்தை
கற்பக மூர்த்தி போற்றி. - கவிஞர் கண்ணதாசன்

பிள்ளையார்பட்டி உற்சவர்


இயற்கையாக குகையில் தோன்றியுள்ள கற்பக விநாயகர் வலம் புரி விநாயகர் ( அதாவது தும்பிக்கை வலப்புறம் வளைந்துள்ளது). அவர் கற்பக விருட்சமாய் நமது துன்பங்களை துடைத்து எல்லா நலன்களையும் வழங்குவார் அவர் தாள் பணிவோம்.
************************

அன்பர்களே, KRS அவர்களுக்கு பல ஆயிரம் நன்றிகள், பிள்ளையார் சதுர்த்தியன்று முருகன், அம்பாள், சிவன், கண்ணன் பாட்டுகள் உள்ளது போல் பிள்ளையாருக்கும் பாட்டு துவங்கலாம் என்றவுடன் அதை செயல்படுத்தியதற்காக.

விருப்பம் உள்ள அன்பர்கள் அனைவரும் ( குறிப்பாக விநாயகர் அகவல் எழுதி வரும் VSK ஐயா, கணபதி ராயன் புகழைக்கூறிய கீதாம்மா ( அம்மா தங்கள் spondilytis சீக்கிரம் குணமாக அந்த பிள்ளையாரிடம் பிரார்த்திக்கின்றேன்), கவிநயா ஆகியோர்களையும் கை கூப்பி அழைக்கின்றேன். வந்து கலந்து கொள்ளுங்கள்.

Thursday, September 18, 2008

வினாயகனே! வினை தீர்ப்பவனே!

வினாயகனே! வினை தீர்ப்பவனே! இதான் முதல்வன் வலைப்பூவில் முதல் பாடல்! சீர்காழியாரின் கன கம்பீர வெங்கலக் குரலில், பாடலை இங்கு கேட்கலாம்!
வினாயகனே!வினை தீர்ப்பவனே!
வேழ முகத்தோனே! ஞால முதல்வனே!
(வினாயகனே)

குணா நிதியே! குருவே சரணம்!
குறைகள் களைய, இதுவே தருணம்!

(வினாயகனே)

உமா பதியே உலகம் என்றாய்!
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்!
கண நாதனே மாங்கனியை உண்டாய்!
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்!

(வினாயகனே)

குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரி:
இசை:

ராகம்: கீரவாணி
தாளம்:

முதல்வனுக்கு முதல் வணக்கம்!

ஒவ்வொரு குழு வலைப்பூ துவங்கும் போதும் கணபதியானை முன்னிட்டு, முதல் வணக்கம் இட்டுத் தான் துவங்குவோம்! ஆனால் அவனுக்கு என்று தனியான ஒரு வலைப்பூ இது வரை தோன்றவில்லை! பிள்ளையார் சதுர்த்தி அன்று கைலாஷி ஐயா, தமது வலைச்சரப் பதிவில் இதைச் சற்று ஏக்கத்துடன் குறிப்பிட்டு இருந்தார்!

அவர் ஏக்கத்தைப் புரட்டாசியில் புரட்டிப் போட வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் போலும்! இதோ விநாயகப் பெருமானுக்கு என்று தனியானதொரு பாடல் வலைப்பூ! - பிள்ளையார் பாட்டு!

இன்று மகா சங்கட ஹர சதுர்த்தி!
இன்றே செய்வோம்! நன்றே செய்வோம்! யானைக் கன்றே செய்வோம்!

முதல்வனுக்கு முதல் வணக்கம்!